சீன மக்கள் குடியரசின் தேசிய திரைப்படப் பணியகம், ஸ்பெயின் திரைப்படம் மற்றும் ஆடியோவிஷுவல் ஆர்ட்ஸ் பணியகம் ஆகியவற்றுக்கும் இடையே திரைப்பட ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெய்ஜிங்கில் கையெழுமிடப்பட்டது.
சீனாவும் ஸ்பெயினும் திரைப்படத் துறையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்கும். கண்காட்சியில் பங்கெடுப்பு, ஒன்றுக்கொன்று திரைப்படங்கள் திரையிடுதல், கூட்டுத் தயாரிப்பு, பணியாளர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பும் நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவாக்கி, இரு நாடுகளுக்கிடையே மக்கள் தொடர்புக்கும், இரு தரப்பு உறவின் உயரமான வளர்ச்சிக்கும், புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் சீனாவில் வெளிநாட்டுக்கான உயர் நிலை திறப்பு அதிகரித்து வருவதுடன், சீனச் சந்தையில் வாய்ப்புகளும் பெருகியுள்ளன.
திறப்பைத் தொடர்ந்து விரிவாக்கி, ஸ்பெயின் போன்ற கூட்டாளிகளுடன் பலதரப்புவாதத்தைப் பேணிக்காத்து, தாராளமான வர்த்தகத்துக்கும் பொருளாதார உலகமயமாக்கலுக்கும் சீனா பெரும் ஆதரவளித்து வருவதை, சீன-ஸ்பெயின் திரைப்படத் துறை ஒத்துழைப்பு எடுத்துக்காட்டியுள்ளது. சமமான ஒத்துழைப்பு, பரஸ்பர நன்மை மற்றும் வெற்றி-வெற்றி ஆகியவற்றின் மூலம், இரு தரப்பும் அதிகமான தரமான சேவைகள் மற்றும் தயாரிப்புகளைப் பெற்று, பொது மக்களுக்கு நன்மை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்பெயின் தலைமையமைச்சர் சான்செஸ் ஏப்ரல் 11ஆம் நாள் சீனாவுக்கு வந்திருந்த போது பெய்ஜிங்கில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.