உள்ளூர் நேரப்படி மே 8ஆம் நாள் நண்பகல் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் பெல்கிரேட் நகரில் செர்பியஅரசுத் தலைவர் அலெக்ஸாண்டர் வூசிச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் செய்தியாளர்களைக் கூட்டாக சந்தித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், வரலாற்றை மீளாய்வு செய்து, உலக அமைதி மற்றும் வளர்ச்சியைக் கூட்டாக பேணிக்காக்கும் மாபெரும் போராட்டத்தில் சீன-செர்பிய நட்புறவு ஒன்றிணைந்து உருவாகியுள்ளது. எதிர்காலத்தை எதிர்நோக்கி, புதிய காலத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்குவது இரு தரப்புகளின் நெடுநோக்கு தேர்வாகும்.
அருமையான வாழ்க்கை மீதான இரு நாட்டு மக்களின் விருப்பத்தை நனவாக்குவது இதன் நோக்கமாகும். செர்பியாவுடன் இணைந்து, புதிய காலத்தில் சீன-செர்பிய பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும் புதிய பாதையில் காலடி எடுத்து வைத்து, இரு நாட்டுறவு ஒளிவீசுவதை முன்னேற்ற சீனா விரும்புவதாக சுட்டிக்காட்டினார்.