வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 2 தேசிய காவல்படை வீரர்கள் கவலைக்கிடம்  

Estimated read time 0 min read

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நேற்றிரவு (புதன்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளை மாளிகையில் இருந்து இரண்டு தெருக்கள் தொலைவில், 17 மற்றும் ஐ தெருக்கள் சந்திப்புக்கு அருகே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
படுகாயமடைந்த இரண்டு வீரர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை.

You May Also Like

More From Author