எல்லாத்துக்கும் காரணம் இந்தியா தான், இரு-முனை போருக்கு தயார்:அறைகூவல் விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்  

Estimated read time 1 min read

ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களுடன் பாகிஸ்தான் கடுமையான எல்லை மோதல்களில் ஈடுபட்டுள்ள சூழ்நிலையில், இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஒரு முக்கியக் கருத்தை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவ்ஜா ஆசிப், ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது புதிய கருத்துக்களை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
தலிபான்களுடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு முனை போருக்கு நாடு(பாகிஸ்தான்) தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
அதோடு ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசாங்கத்திற்குப் பின்னால் இந்தியா மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“டெல்லி (இந்தியா) ஆதரவுடன் தாலிபான்கள் ஒரு மறைமுகப் போரை(Proxy War) நடத்துகின்றனர்” என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், எல்லைப் பகுதியில் இந்தியா “தந்திரமாக” செயல்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author