சீனாவின் வணிக அமைச்சகம் வெளியிட்ட செய்தியின் படி, இவ்வாண்டு சீன தேசிய விழா விடுமுறை காலத்தில் பல்வேறு இடங்களின் நுகர்வு சந்தை செழுமையானது. தேவையான பொருட்களின் வினியோகம் நிதானமானது.
வணிக அமைச்சகத்தின் கண்காணிப்பு தகவலின் படி, இந்த விடுமுறை காலத்தின் முதல் 4 நாட்களில், சீனாவின் சில்லறை மற்றும் உணவக தொழில்நிறுவனங்களின் விற்பனை தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.3 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
முதல் 3 நாட்களில், சீனாவில் 78 முக்கிய வணிக தளங்களில், நுகர்வோர்களின் எண்ணிக்கையும் விற்பனை தொகையும் முறையே 4.2, 4.0 விழுக்காடு அதிகரித்து காணப்பட்டது.
சுற்றுலாப் பயணம் வரவேற்கத்தக்கது. இக்காலத்தில் திரைப்பட வசூல் தொகை 110 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.