2023-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற 59,000 இந்தியர்கள்!

கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு, அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு சுமார் 8 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டினர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். இதில், 1 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் (12.7 சதவீதம்) மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க குடியுரிமை பெறுவதில், மெக்சிகோ முதல் இடத்தில் உள்ளது.

இந்தியர்கள் 59 ஆயிரத்து 100 பேர் (6.7 சதவீதம்) அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 44 ஆயிரத்து 800 பேரும் (5.1 சதவீதம்), டொமினிகன் குடியரசைச் சேர்ந்த 35 ஆயிரத்து 200 பேரும் (4 சதவீதம்) கடந்த ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author