பிரான்ஸ் அரசுத் தலைவர் மாக்ரொன் விரைவில் சீனாவுக்கு வருகை தரவுள்ளார். கடினமான சர்வதேச நிலைமையில், பெரிய நாடுகளின் ஒத்துழைப்பு, பூச்சியம் கூட்டுத் தொகை விளையாட்டு அல்ல. அது ஆக்கப்பூர்வப் பேச்சுவார்த்தையில் கூட்டு வெற்றி ஆகும் என்பதை சீனாவும் பிரான்ஸும் காண்பிக்க வேண்டும். அண்மையில் சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், சர்வதேச இணையப் பயன்பாட்டாளர்களுக்கு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
2வது உலக போரில் வெற்றி பெற்ற நாடுகளாகவும், ஐ.நா பொது பேரவையின் நிரந்தர உறுப்பு நாடுகளாகவும் திகழ்கின்ற சீனாவும், பிரான்ஸும், வெற்றி சாதனைகளையும் போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கையும் பேணிக்காத்து, உலகளாவிய சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்று 76.1 விழுக்காட்டினர்கள் இதில் கருத்து தெரிவித்தனர். இரு நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வெளிப்புற அபாயம் மற்றும் அச்சுறுத்தலைத் தடுக்க வேண்டும் என்று 75 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். ஐரோப்பிய நாடுகள், சீனாவுக்கான சரியான புரிந்துணர்வைக் கொண்டு, சீன-ஐரோப்பிய உறவிலுள்ள சர்ச்சைகளைப் பகுத்தறிவுடன் பார்க்க வேண்டும் என்று 92 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.
