“சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம் யூடியூபில் அனைவரும் இலவசமாகக் காணும் வகையில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் நடிகை ஜெனிலியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மனநலம் பாதித்த மாணவர்களுக்கு, கூடைப்பந்து சொல்லி தரும் பயிற்சியாளராக அமீர்கான் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படம் எந்த ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் நேரடியாக யூடியூபில் வெளியாக உள்ளது.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                