நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தின் 33-வது ஆண்டு நிறைவுறும் நிலையில், அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக The route நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது.
தற்போது அது வைரலாகி வருகிறது.
இந்த 33 ஆண்டு கால திரைப்பயணத்தினை விஜய் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் நிறைவு செய்வார் என கூறப்படுகிறது.
அதனால் அவரின் ரசிகர்கள் சோகத்துடனும், அதே சமயம் வரலாற்றுச் சிறப்புமிக்க கொண்டாட்டத்துடனும் அவரை வழியனுப்பத் தயாராகி வருகின்றனர்.
அதே நேரத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
இப்படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
நடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 33 வருடங்கள் நிறைவு!
