இந்தியக் கடற்படையின் வீரம், சாதனைகள் மற்றும் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 அன்று இந்திய கடற்படை நாள் (Indian Navy Day) கொண்டாடப்படுகிறது.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது நடத்தப்பட்ட தீர்க்கமான ஆபரேஷன் ட்ரைடென்ட் கடற்படைத் தாக்குதலின் ஆண்டு நிறைவை இந்நாள் குறிக்கிறது.
நாடு முழுவதும் உள்ள கடற்படைத் தளங்களில் அணிவகுப்புகள் மற்றும் கடற்படையின் மேம்பட்ட திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்வுகளுடன் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்திய கடற்படை நாள் 2025: இந்திய கடற்படையின் தந்தை யார்?
