ஜெயம் ரவியின் அடுத்த வெளியீடான ‘பிரதர்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து ஒரு பாடலும் வெளியாகியுள்ளது.
நடிகை பூமிகா நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்புகிறார் இப்படத்தின் மூலம்.
மேலும் இப்படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
அதோடு, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், சீதா போன்ற பலர் நடித்துள்ளனர். ராஜேஷின் ட்ரேட்மார்க்கான குடும்பப்பாங்கான திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
அதே போல, தீபாவளி அன்று சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் வெளியாகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.