2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் பாடல் ஊக்குவிக்கும் என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் தொடங்கியது. இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு ஊக்கம் தந்து, சுதந்திர தாகத்தை அதிகரித்தது வந்தே மாதரம் பாடல் என்றும், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குப் பதிலடி கொடுக்க வந்த பாடலே வந்தே மாதரம் எனவும் கூறினார்.
வந்தே மாதரம் பாடலை வெறுத்த முஸ்லிம் லீக் கட்சியை முன்னாள் பிரதமர் நேரு ஆதரித்தார் எனவும் குற்றம் சாட்டினார்.
