பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதை அடுத்து, உச்சத்தை எட்டியது பங்குச் சந்தை 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனதை அடுத்து, பெஞ்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் இன்று சாதனை உச்சத்தை எட்டின.
சென்செக்ஸ் முதன்முறையாக 77,000 புள்ளிகளைத் தாண்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 50 புதிய உச்சத்தை எட்டியது.
ஆனால், இரு குறியீடுகளும் அவற்றின் ஆரம்ப போக்குகளில் இருந்து பின்வாங்கி இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.
இன்று காலை 10:09 நிலவரப்படி, எஸ்&பி பிஎஸ்இ சென்செக்ஸ் 67.22 புள்ளிகள் குறைந்து 76,626.14 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50, 1.35 புள்ளிகள் அதிகரித்து 23,291.50 ஆகவும் இருந்தது.
ஆரம்பத்தில் உயர்வு இருந்தபோதிலும், எதிர்காலத்தில் சாத்தியமான பொருளாதார சவால்கள் ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக நிதி ஒழுக்கத்தை பராமரிப்பதில் சவால்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

You May Also Like

More From Author