காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலை தொடர்ந்து உறைபனி நிலைக்குக் கீழே சென்றுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.
டிசம்பர் 5ம் தேதி இரவுக்குப் பிறகு ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 4.1 டிகிரி செல்சியசாகவும், புகழ்பெற்ற பனிச்சறுக்குத் தலமான குல்மார்க்கில் மைனஸ் 2.6 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.
பஹல்காம், குப்வாரா, காஜிகுண்ட் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பூஜ்ஜியத்திற்குக் குறைவான வெப்பநிலையே நீடித்து வருகிறது.
இந்தத் திடீர் வெப்பநிலை வீழ்ச்சியால் உண்டான கடுமையான குளிர் காரணமாக, பல பகுதிகளில் அடர்ந்த மற்றும் மிதமான மூடுபனி நிலவுகிறது.
இதன் காரணமாகக் காஷ்மீர் மற்றும் ஜம்முவின் சில பகுதிகளில் உள்ள பயணிகள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, டிசம்பர் 8-ஆம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், உயரமான பகுதிகளில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9 முதல் 17 வரை பெரும்பாலும் மேகமூட்டமான நிலையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
