ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் குறித்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
இதற்கு முன்பு ஜி.எஸ்.டி.யில் ஏதாவது குறை இருப்பதாக மக்கள் சொன்னால், மோடி ஏன் இப்படி செய்கிறார். நிர்மலா சீதாராமன் என்ன செய்கிறார், அவருக்கு ஊறுகாய்தான் போட தெரியும். ஜி.எஸ்.டி.யை நடத்த தெரியாது என்று விமர்சனம் செய்தார்கள். அதை நாங்கள் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தோம். அப்படி சொல்லாதீர்கள் என்று நாங்கள் யாரையும் எதிர் மறையாக பேசவில்லை. ஆனால் இவ்வளவு நாளில் மாநில அரசுகளுக்கு பலவிதமான நல்லது நடந்திருக்கிறது.
மாநில அரசுக்கு எவ்வளவு வருமானம் பெருகி இருக்கிறது என்பதையும் எடுத்து சொன்னேன். அந்த நல்லதுக்கு, ஊறுகாய் போடுகிற நிர்மலா மாமிதான் காரணம் என்று யாரும் சொல்லவில்லை. சொல்லாமல் போனால் கூட எனக்கு பரவாயில்லை. நாட்டுக்காக நாம் செய்கிறோம், எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்யவில்லை. சொல்லாவிட்டாலும் இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்ன?.இன்றைக்கு எல்லா உணவு பொருட்களும் 5 சதவீதத்திற்கு வந்து விட்டது, ஜீரோவுக்கு போய் விட்டது. வகைப்பாடு பிரச்சினை இப்போது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
நகரங்களுக்கு இடையேயான ரயில்வேயின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான முன்மொழிவுகள் என்னும் அறிக்கையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் [மேலும்…]
2026ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க மானிடப் பண்பாட்டியல் பரிமாற்ற நடவடிக்கை மற்றும் சீன வசந்த விழாவுக்கான கொண்டாட்ட நடவடிக்கையின் துவக்க விழா 24ஆம் நாள் மொரிஷியஸ் [மேலும்…]
சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டு சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய தரநிலைப் பொருட்களின் (National Standard [மேலும்…]
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாட்டின் சுதந்திர போராட்டத்தின் போது, தங்கள் உயிர்களை தியாகம் செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில், ஜன., [மேலும்…]
இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 26) [மேலும்…]
1. இந்தியாவின் 77வது குடியரசு தினமாகிய இன்றில் இருந்தாவது ஒற்றுமை ஓங்கட்டும், பிரிவினை ஒழியட்டும். இந்தியர்கள் அனைவர்க்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்! 2. [மேலும்…]