சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் எழுதிய கட்சியின் சுய புரட்சிக்கு எடுக்க வேண்டிய 5 படிகள் எனும் கட்டுரை டிசம்பர் முதல் நாள் ஜியூஷி இதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.
பணி முறையில் இருந்து கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவது புதிய யுகத்தில் கட்சியின் சுய புரட்சிக்கான ஒரு முக்கிய அனுபவமாகும். தெளிந்த கோரிக்கையுடன் முழுமையான நடைமுறையாக்கம் தான் கட்சியின் சுய புரட்சிக்கான திறவுகோலாகும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிக்கலான ஆட்சிச் சூழலை எதிர்கொண்டு, சீனப் பாணி நவீனமயமாக்கலின் கடமைக்குத் தோள் கொடுத்துள்ள கட்சிக்கு சுய புரட்சி அவசியமானதாக இருக்கும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
