மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் (Malik Streams) என்ற நிறுவனம், நடிகர் ரஜினிகாந்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, “கூலி வாட்ச் & வின் கான்டஸ்ட்” என்ற பெயரில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது.
இது முற்றிலும் அங்கீகரிக்கப்படாத, போலியான போட்டி என ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது, இந்தப் போட்டிக்கு ரஜினிகாந்திடம் இருந்து எந்த முன் அனுமதியும் பெறப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரசிகர்கள் இந்த தவறான அறிவிப்பை நம்ப வேண்டாம் என்றும், இந்தச் செய்தியை பரப்பி மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூலி திரைப்படம் குறித்து வெளியாகும் அந்த வதந்தியை நம்ப வேண்டாம்; ரசிகர்களுக்கு எச்சரிக்கை
