ஆசியாவிலேயே பழமையான வானொலி சேவையான இலங்கை வானொலி (தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – SLBC), தனது 100-வது ஆண்டு மைல்கல்லை எட்டி வரலாறு படைத்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பிபிசி (BBC) தொடங்கப்பட்ட மூன்றே ஆண்டுகளில், அதாவது 1925 டிசம்பர் 16 அன்று இலங்கையில் வானொலி சேவை முதன்முதலில் தொடங்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கும் பெருமையை இது பெற்றுள்ளது.
தொடர்ந்து சில ஆண்டுகளில் தனது வர்த்தக ஒளிபரப்பை துவங்கியதும், இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் கூட இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள் என வரலாறு கூறுகிறது.
