சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு அக்டோபர் 28ஆம் நாள் மாலை பண்பாட்டு வல்லரசைக் கட்டியமைப்பது குறித்து 17ஆவது ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.
2035ஆம் ஆண்டுக்குள் பண்பாட்டு வல்லரசின் கட்டுமானத்தை நிறைவேற்றும் நெடுநோக்கு இலக்கில் ஊன்றி நின்று பாடுபட வேண்டும் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், மார்க்சிசம் சிந்தனையை அடிப்படை வழிகாட்டலைக் கொண்டு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசத்தின் பண்பாட்டு வளர்ச்சிப் பாதையிலும், கட்சியின் தலைமையிலும் உறுதியாக ஊன்றி நிற்க வேண்டும்.
பரந்த மற்றும் ஆழமான சீனாவின் நாகரிகத்தில் வேரூன்றி, அதோடு, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் போக்கிற்கு ஏற்ப செயல்பட வேண்டும். வலுவான சிந்தனை வழிகாட்டல், ஒற்றுமை, ஈர்ப்பாற்றல், சர்வதேச செல்வாக்கு முதலியவை வாய்ந்த புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசப் பண்பாட்டை இடைவிடாமல் வளர்க்க வேண்டும்.
மக்களின் தன்னம்பிக்கையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வல்லரசின் கட்டுமானம் மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான பண்பாட்டு அடித்தளத்தை வலுவாக உருவாக்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.