நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை இஸ்ரேல் மீது ஏவியது ஈரான்  

Estimated read time 0 min read

கடந்த சில மணி நேரத்தில் தங்கள் நாட்டின் மீது ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல், முன்னதாக அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின் ஈரானின் பதில் தாக்குதல் குறித்து கூறுகையில், “கடந்த சில மணி நேரத்தில், ஈரான் இஸ்ரேலை நோக்கி 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவியுள்ளது, மேலும் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் அச்சுறுத்தல்களை தடுக்க செயல்படுகின்றன.” என்றார்.
சுமார் 200 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றதாகவும், சுமார் 100 இலக்குகளைத் தாக்கியதாகவும், தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் டெஃப்ரின் மேலும் கூறினார்.

You May Also Like

More From Author