ஜனவரி 7-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Estimated read time 1 min read

ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி (O7.01.2025) புதன்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். குன்னூர் அருகே உள்ள ஜெகதளாவை தலைமையிடமாக கொண்டு ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களை அடக்கிய ஆரூர் சார்பில் ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையையொட்டி 8 கிராம பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பல்வேறு கிராமங்களுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள்.

இந்த நிலையில், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், சனிக்கிழமை வேலை நாளாக செயலபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author