பிற நாடுகளின் மீது கூடுதல் சுங்க வரியை விதிப்பதன் மூலம், அமெரிக்கா தனது ஃபென்டானில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது

 

அண்மையில், அமெரிக்கா ஃபென்டானில் பிரச்சினையைச் சாக்குப்போக்காக கொண்டு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது 10 விழுக்காடு கூடுதல் சுங்க வரியை விதிப்பதாக அறிவித்தது.

கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா ஃபென்டானில் பிரச்சினையைப் பரப்பி வருகிறது. அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், உள்நாட்டில் ஃபென்டானில் தவறாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக சீனா மீது பழி சுமத்தினர். இதை காரணமாக கொண்டு, அமெரிக்கா சீனாவின் நிறுவனங்கள் மற்றும் குடி மக்களின் மீது தடை நடவடிக்கையை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் பொது கருத்துக்களை தவறாகக் கையாண்டு வருகின்றனர்.

சர்வதேச மயக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, உலகிலேயே மிக அதிகமாக ஃபென்டானில் உற்பத்தி செய்யப்படும் நாடாகவும் அதிக நுகர்வைக் கொண்ட நாடாகவும் அமெரிக்கா திகழ்வது தெரியவந்துள்ளது.

உலகின் 5 விழுக்காடு  மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 80 விழுக்காடான ஓபியாய்டு மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் மருந்து அமலாக்க நிர்வாகம் வெளியிட்ட தரவுகளின்படி, ஃபென்டானில் அளவுக்கு மீறி பயன்படுத்தவதே, 18 முதல் 45 வயது வரையான அமெரிக்கர்களின் உயிரிழப்புக்கான முக்கியக்  காரணமாகும்.

அமெரிக்காவின் வேண்டுகோளின்படி, ஃபென்டானில் தொடர்பான அனைத்து பொருட்களையும் கட்டுப்படுத்துவதாக சீனா 2019ஆம் ஆண்டு அறிவித்தது. இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொண்ட முதலாவது நாடாக சீனா திகழ்கிறது. ஃபென்டானில் பிரச்சினையை அமெரிக்கா சமாளிப்பதற்குச் சீனா ஆதரவளித்துள்ளது.

இதனிடையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் 2022ஆம் ஆண்டு மார்ச் திங்கள் வெளியிட்ட சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு நெடுநோக்கு அறிக்கையில், 2019ஆம் ஆண்டு சீனா ஃபென்டானிலைக் கட்டுப்படுத்தத் தொடங்கியது முதல் தற்போது வரை, சீனாவிலிருந்து அமெரிக்காவில் நுழைந்த ஃபென்டானில் அல்லது அதைப் போன்ற பொருட்கள் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், மெக்சிகோவுடனான போதைப்பொருட்கள் கட்டுப்பாடு பற்றிய சட்ட அமலாக்க ஒத்துழைப்புக்கும் சீனா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. போதைப்பொருள் உற்பத்திக்கு எளிதில் பயன்படக்கூடிய இரசாயனங்கள் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதை மெக்சிகோ கண்டறியவில்லை.

அமெரிக்காவில் ஃபென்டானில் அளவுக்கு மீறி தவறாகப் பயன்படுத்தப்படுவது மற்றும் ஒழுங்குமுறை குறைபாடு ஆகியவை முக்கியக் காரணமாகும். அதனைச் சரி செய்யாமல் பிற நாடுகளின் பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி விதிப்பதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

Please follow and like us:

You May Also Like

More From Author