இணைய மேடைகளின் தரவின்படி, 2025ஆம் ஆண்டு சீனாவில் அனிமேஷன் திரைப்படங்களின் மொத்த வசூல் 2500கோடி யுவானைத் தாண்டியது. மேலும், இவ்வாண்டு சீனத் திரைப்பட வரலாற்றில் மிக அதிக அனிமேஷன் திரைப்பட வசூல் பெற்ற ஆண்டாக மாறியுள்ளது.
நே ஜா 2, ஜூட்டோபியா 2, லாங்லாங் மலையிலுள்ள சிறிய அரக்கர் ஆகிய 3 திரைப்படங்கள் இவ்வாண்டின் அனிமேஷன் திரைப்பட வசூல் தரவரிசையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
இதுவரை, 2025ஆம் ஆண்டு சீனத் திரைப்படங்களின் மொத்த வசூல் 5090கோடி யுவானைத் தாண்டியுள்ளது. சீனத் திரைப்படச் சந்தையின் ஆற்றல், உலகத் திரைப்பட தொழிலுக்கும் மேலதிக வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. உலக திரைப்படத் தொழிலின் வளர்ச்சிக்கான மைய உந்து ஆற்றலாகச் சீன சந்தை மாறியுள்ளதாகப் பன்னாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சீனத் திரைப்படச் சந்தையின் திறப்பையும் உலகளாவிய ஈர்ப்பாற்றலையும் இது வெளிக்காட்டியது.
