என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று தென்காசி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஏன்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பிரசாரம் மற்றும் ரோடு-ஷோ மேற்கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் வாசுதேவநல்லூர் செல்கிறார். அங்கு புளியங்குடி சிந்தாமணி முதல் காமராஜர் சிலை வரை ரோடு ஷோ மூலம் வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளர் அனந்தன் அய்யாசாமியை ஆதரித்து ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன் பின்னர், ஹெலிகாப்டர் மூலம் திருச்செந்தூர் செல்லும் அவர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
