டெல்லியில் கடந்த சில நாட்களாக ‘மிகவும் மோசம்’ (Severe) என்ற நிலையில் இருந்த காற்றின் தரம், இன்று சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.
இருப்பினும், நாளை முதல் கடும் குளிர் வாட்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 349 ஆக பதிவாகியுள்ளது.
இது ‘மிகவும் மோசம்’ (Very Poor) என்ற பிரிவின் கீழ் வருகிறது. நேற்று இது 400-க்கும் அதிகமாக (Severe) இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நொய்டா, குருகிராம் பகுதிகளில் இன்று லேசான பனிமூட்டம் காணப்பட்டது.
டெல்லியில் வானிலை மாற்றம்: குறையும் காற்று மாசு, அதிகரிக்கும் குளிர்
