இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(ISRO) இன்று மற்றுமொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ‘பாகுபலி’ ராக்கெட் என்று அழைக்கப்படும் LVM3-M6, இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது.
இன்று காலை 8:55 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்பட்டது.
இந்த ராக்கெட் சுமார் 6,100 கிலோ எடை கொண்ட புளூபேர்ட் பிளாக்-2 என்ற செயற்கைக்கோளைச் சுமந்து சென்றது.
அமெரிக்காவின் ‘ஏஎஸ்டி ஸ்பேஸ் மொபைல்’ நிறுவனத்திற்காக இஸ்ரோவின் NSIL மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
விண்வெளியில் இஸ்ரோவின் ‘பாகுபலி’!அதிக எடை கொண்ட சாட்டிலைட்டை சுமந்து சென்று LVM3-M6 சாதனை
