2025ஆம் ஆண்டுக்கான ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டி பிப்ரவரி 7ஆம் நாள் வடகிழக்கு சீனாவிலுள்ள ஹார்பின் நகரில் துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் நாள் நடப்புப் போட்டிகளில் முதலாவது தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்று தகவல் வெளியானது.
தொடர்புடைய ஆயத்தப் பணிகள் குறித்து, ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் செயல்பாட்டுக் குழு செவ்வாய்கிழமை நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் இந்த விளையாட்டுப் போட்டிக்கான முக்கிய ஊடக சேவை மையம் செயல்படத் தொடங்கியது.
தற்போது வரை 34 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1275 விளையாட்டு வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை, வரலாற்றில் மிக அதிக பதிவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.