சீனாவின் போஹைய் கடல் பரப்பில் சின்குவாங்டாவ் 29-6 எண்ணெய் வயல் கண்டறியப்பட்டுள்ளதாக சீன தேசிய ஆஃப் சோர் எண்ணெய் நிறுவனம் 24ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீனாவில் மிகப் பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தித் தளமான போஹைய் எண்ணெய் வயலில் 2019ஆம் ஆண்டு முதல் இது வரை தொடர்ந்து கண்டறியப்பட்ட பத்து கோடி டன் கையிருப்பு கொண்ட 7ஆவது எண்ணெய் வயலாக இது விளங்குகிறது. இது, நாட்டின் எரியாற்றல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலும், இந்த எண்ணெய் வயலின், ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் நாள் ஒன்றுக்கு சுமார் 370 டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
