2025ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் சீன அரசுசார் நிறுவனங்களின் மொத்த கூட்டு மதிப்பு 9லட்சத்து 50ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 1.4விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் வரை, அரசுசார் நிறுவனங்களின் பணியாளர்களுக்கான ஆண்டு உற்பத்தித் திறன் நபருக்கு 8லட்சத்து 11ஆயிரம் யுவானாகும். 3லட்சத்து 30ஆயிரம் கோடி யுவான் நிலையான இருப்பு முதலீடு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான முதலீடு 89016கோடி யுவானை எட்டியது. நிறுவனங்களின் மொத்த வருமானத்தில் இது 2.62விழுக்காடு வகித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சீன அரசுசார் நிறுவனங்களின் வளர்ச்சியளவு, மதிப்புப் படைப்பு ஆற்றல் மற்றும் அடையாளச் செல்வாக்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவாறு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
