14வது ஐந்தாண்டுத் திட்டக்காலம் தொடங்கியது முதல் இது வரை,
சீனாவின் நீர் சேமிப்பு அடிப்படை கட்டுமானப் பணிகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில், புதிதாக தொடங்கப்பட்ட முக்கிய நீர் சேமிப்புத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 172 ஆகும். இதன் தொடர்புடைய முதலீட்டுத் தொகை 5 இலட்சத்து 40 ஆயிரம் கோடி யுவானாகும். இது,
13வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் இருந்ததை விட 1.6 மடங்காக அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு இறுதி வரை, சீனாவில் 95 ஆயிரம் நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டன. 200 பெரிய மற்றும் நடுத்தர ரக நீர் எடுத்துச்செல்லும் திட்டப்பணி நிறைவேற்றியுள்ளன. பெரிய மற்றும் நடுத்தர பாசனப் பிரதேசங்களின் எண்ணிக்கை 6924 ஆகும். 31 இலட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள அணைக்கட்டுகள் உருவாக்கப்பட்டன. உலகில் மிகப் பெரிய அளவிலான மிக அதிகமான மக்களுக்கு நன்மை பயக்கும் நீர் சேமிப்பு அடிப்படை அமைப்புமுறை சீனாவில் கட்டியமைக்கப்பட்டுள்ளன.