ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கவுன்சிலின் 25ஆவது கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 25ஆம் நாளில், 2025ஆம் ஆண்டு எஸ்.சி.ஓ மனித பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கையை பெய்ஜிங்கில் சீன ஊடக குழுமம் மற்றும் இவ்வமைப்பின் செயலகம் கூட்டாக நடத்தின. கிர்கிஸ்தான் அரசுத் தலைவர். பாகிஸ்தான் தலைமையமைச்சர் ஆகிய இருவரும் இக்கூட்டத்திற்கு வாழ்த்து செய்தியை அனுப்பினர். இந்நிகழ்வில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் அரசியல், பண்பாடு, செய்திஊடகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேலான பல்வேறு துறையினர்களின் முன்னிலையில் இவ்வமைப்பின் மனித பண்பாட்டுப் பரிமாற்றச் சாதனைகள் வெளியிடப்பட்டன.
சீன ஊடக குழுமம் மற்றும் இவ்வமைப்பின் செயலகம் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைப்பு ஆவணங்களைப் பரிமாறிகொண்டன. நீண்டகாலமான தொடர்பு வழிமுறைகளை விரிவாக்கி, ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கி, நுண்ணறிவு போன்ற முன்னணி அறிவியல் தொழில் நுட்பத் துறைகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்த இரு தரப்பும் முடிவு செய்தன.