துருக்கியில் கோர விபத்து: லிபிய ராணுவத் தளபதி உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு!

Estimated read time 1 min read

லிபியா நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நீடித்து வருகிறது.

அங்கு ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி போன்ற நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு தலைநகர் டிரிப்போலியை (Tripoli) தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. இதற்கு நேர்மாறாக, ரஷ்யா மற்றும் எகிப்து நாடுகளின் ஆதரவுடன் மற்றொரு போட்டி அரசு நாட்டின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், லிபியாவின் டிரிப்போலி அரசுப் பிரிவைச் சேர்ந்த முக்கிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத், நான்கு உயர் அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் துருக்கிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்த தனியார் ஜெட் விமானம், துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து (Ankara) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானிகள், விமானத்தை அவசரமாகத் தரையிறக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவத் தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட விமானத்தில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா மற்றும் லிபிய அதிகாரிகள், இந்த விபத்திற்குத் தொழில்நுட்பக் கோளாறே முதன்மைக் காரணம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author