இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூன்றாவது ஏவுதளத்தை அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது.
கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இஸ்ரோவிடம் இரண்டு ஏவுதளங்கள் உள்ளன. இருப்பினும், எதிர்காலத்தில் 12,000 கிலோ முதல் 14,000 கிலோ வரை எடையுள்ள மிக கனமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்குப் பெரிய அளவிலான ஏவுகணைகளும், கூடுதல் வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பும் அவசியமாகும்.
இந்தப் புதிய தேவைகளைப் பூர்த்தி செய்யவே மூன்றாவது ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவின் புதிய மைல்கல்; ஸ்ரீஹரிகோட்டாவில் பிரம்மாண்டமான 3வது ஏவுதளம்
