2026 புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்னை மாநகரக் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, விடுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் முறையாகச் சோதிக்கப்பட வேண்டும். வாகனங்களின் விவரங்கள் மற்றும் உரிமையாளர்களின் தகவல்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.
அனைத்து நுழைவு வாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகள் மற்றும் உணவு பரிமாறப்படும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
தற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அவற்றின் உறுதித்தன்மை குறித்துத் தீயணைப்புத் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பாக, நீச்சல் குளத்தின் மீதோ அல்லது அதன் அருகிலோ மேடைகள் அமைக்கக் கூடாது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு செக்!
