சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை வெற்றி

சீன-கம்போடிய-தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டிசம்பர் 29ஆம் நாள், சீனாவின் யுன்னான் மாநிலத்தின் யூசி நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, கம்போடிய துணைத் தலைமை அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான ப்ராக் சோகுங், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசாக் புவாங்க்கெட்கேவ் ஆகியோரும் இம்மூன்று நாடுகளின் படையின் பொறுப்பாளர்களும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொது செய்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. கம்போடியாவும் தாய்லாந்தும் மேலும் தொடர்புகளை வலுப்படுத்தி, போர் நிறுத்த நிலைமையைத் தொடர்ந்து நிலைநிறுத்தி, ஒன்றுடன் ஒன்று தொடர்புகளை மீட்டு, கூட்டு அரசியல் நம்பிக்கையை மீண்டும் கட்டியமைத்து, பிராந்திய அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author