2025 உலக செயற்கை நுண்ணறிவு மாநாடு 26ஆம் நாள் சீனாவின் ஷாங்ஹாய் மாநகரில் துவங்கியது.
நுண்ணறிவு காலத்தில் உலகத்தின் கூட்டு வளர்ச்சி என்பதை தலைப்பாக கொண்ட இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய தொழில் நுட்பங்கள், இத்துறையின் வளர்ச்சி போக்கு, உலக நிர்வாகத்திலுள்ள புதிய செயல்பாடு ஆகியவை வெளிக்காட்டப்பட்டன.
இம்மாநாட்டின் பொருட்காட்சியரங்கின் நிலப்பரப்பு 70 ஆயிரம் சதுரமீட்டரை முதன்முறையாக தாண்டியது. 800க்கு மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. 3000க்கு மேலான புதிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இவை அனைத்தும், புதிய பதிவை உருவாக்கின. துரின் மற்றும் நோபல் பரிசு பெற்ற 12 பேர் உட்பட 1200 உயர் நிலை விருந்தினர்கள் இதில் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.