டொமினிக்க அரசுத் தலைவர் பர்டன் சமீபத்தில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்த போது கூறுகையில்,
நெருக்கடி தருணங்களில் சிக்கியுள்ள டொமினிக்காவுக்கு சீனாவின் ஆதரவு முக்கிய பங்காற்றியுள்ளது. தவிரவும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, தனது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இம்முன்மொழிவுக்கான தொடர்புடைய திட்டப்பணிகள், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்று தெரிவித்தார். ஒரே சீனா எனும் கொள்கையில் டொமினிக்கா எப்போதும் ஊன்றி நிற்கும். உலகில் ஒரே ஒரு சீனா உள்ளது. சீனாவின் நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்குவது உறுதி என்று பர்டன் கூறினார்.
