கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழித் திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 2, 2026 (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுப்பார்கள்.
இதைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவில் பங்கேற்க ஏதுவாக இந்த உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
