பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) இன்று கைது செய்தது.
பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மார்ச் 1ஆம் தேதி குறைந்த தீவிரம் கொண்ட ஒரு வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால், 10 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷபீர் என்ற நபர் இன்று காலை பல்லாரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷபீர், ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வைத்த முக்கிய குற்றவாளியின் கூட்டாளியாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.