கனடா நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார். இவர் கடந்த வருடம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலைக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் போக்கு என்பது ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கனடா இந்தியாவை பற்றி பரபரப்பான புகார் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சீக்கிய பிரிவினைவாதிகளை டார்கெட் செய்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவு தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மாரிசன் குற்றம் காட்டிய நிலையில் அதனை கண்டித்து அவருக்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது.
இதற்கிடையில் இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு உளவு பார்த்ததாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களுடைய பாதுகாப்புக்காக தான் அவர்களை கண்காணித்ததாக கூறியுள்ளது. அதோடு வடகொரியாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் தங்களுக்கு மிகப்பெரிய சைபர் எதிரி என்றும் அறிவித்துள்ளது.
அதாவது தேசிய சைபர் மதிப்பீடு அச்சுறுத்தல் அறிக்கையை கனடா வெளியிட்ட நிலையில் அந்த பட்டியலில் சீனா முதலாவது சைபர் எதிரி நாடாக இருக்கிறது.
அதன் பிறகு இந்த பட்டியலில் ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் உள்ள நிலையில் ஐந்தாவது தற்போது இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையை கனடா அரசுக்கான இணைய பாதுகாப்பு தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.