ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரேஸ் டிசம்பர் 29ஆம் நாள் புத்தாண்டு உரை நிகழ்த்தினார். புதிய ஆண்டில், பல்வேறு நாட்டுத் தலைவர்கள் துண்பத்திற்கு மாறாக, மக்களுக்கும் பூமிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் கூறுகையில், புதிய ஆண்டு வரும் இத்தருணத்தில், குழப்பமும் உறுதியற்ற தன்மையும் உலகத்தில் நிறைந்துள்ளன. பிளவு, வன்முறை, காலநிலை நெருக்கடி, சர்வதேச சட்டத்தை அத்துமீறும் செயல்கள் முதலியவை, மனித குலம் குடும்பமாக ஒன்றிணைக்கப்படுகின்ற அடிப்படைக் கோட்பாட்டை விட்டு வழிவலகி செல்கின்றன என்றார்.
மேலும், 2024ஆம் ஆண்டு உலகளவில் இராணுவச் செலவு 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்ந்து, சுமார் 10 விழுக்காடு அதிகமாகும். ஆப்பிரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்கு இது சமமாகும். போர் தொடுப்பதற்கு மாறாக, வறுமை ஒழிப்பில் மேலதிக முதலீடு செய்தால் தான், மேலும் பாதுகாப்பான உலகம் உருவாக்கப்பட முடியும் என்றும் குட்ரேஸ் வலியுறுத்தினார்.
புத்தாண்டில், நீதி, மனித குலம் மற்றும் அமைதிக்கு அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
