நவம்பர் மாத ஜிஎஸ்டி ரூ.1.70 லட்சம் கோடி!

Estimated read time 0 min read

நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.69 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் ரூ.1.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 0.7 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு வருவாய் 2.3% குறைந்து ரூ.1.24 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்த 375 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

You May Also Like

More From Author