சீனச் சேவை வர்த்தகத்தின் வேகமான வளர்ச்சி

2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரை, சீனாவின் சேவை வர்த்தகம் தொடர்ந்து வேகமாக வளர்ந்துள்ளது.

சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 5 லட்சத்து 51 ஆயிரத்து 814 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 14.5 விழுக்காடு அதிகமாகும் என்று சீன வணிக அமைச்சகத்தின் சேவை வர்த்தகப் பிரிவின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அறிவுகள் செறிந்த சேவை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், அறிவுகள் செறிந்த சேவை துறையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, 2 லட்சத்து 13 ஆயிரத்து 342 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.

தவிர, சுற்றுலா சேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இவ்வாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், சுற்றுலா சேவை தொடர்ந்து உயர் வேகத்தில் வளர்ந்துள்ளது. சுற்றுலா சேவையின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 528 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 42.8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author