ஹெபெய் மாகாணத்திலுள்ள பிங்குவான் நகரம், சீனாவில் புகழ்பெற்ற ஷிடேக் காளான் வளர்ப்பு மற்றும் உற்பத்தித் தளமாகும். இது சீனாவில் உணவுக்குப் பயன்படும் காளான்களின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுமார் 67ஆயிரம் மூ(சுமார் 4466 எக்டேர் )பரப்பளவில் காளான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் ஆண்டுக்கு விளைச்சல் 630,000 டன்கள் எட்டி, உற்பத்தி மதிப்பு 820 கோடி யுவானாக உள்ளது. காளான்களின் தரம் மற்றும் விளைச்சலை உயர்த்துவதற்காக, நவீன அறிவார்ந்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு, அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், 6 புதிய வகை காளான்கள் வளர்க்கப்பட்டு, 21 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. பிங்குவான் நகரின் காளான் உற்பத்தி தொழில் மூலம் 35,000 குடும்பங்கள் மற்றும் 120,000க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால் விவசாயிகளின் வருமானம் 24 கோடி யுவான் அதிகரித்தது.
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் காளான் வளர்ப்பு தொழில்
You May Also Like
ஸ்பெயின் தலைமை அமைச்சர் சீனாவில் பயணத் திட்டம்
April 8, 2025
சீனா எப்போதும் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின் உறுதியான ஆதரவாளர்
August 20, 2024
பெய்ஜிங் வரலாற்றை எழுதி கொண்டிருக்கிறது : தாமஸ் பாச்
January 15, 2024
More From Author
இன்றைய (செப்டம்பர் 25) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
September 25, 2025
கடல் மேலாண்மை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
June 5, 2024
