மத்திய ஊரக விவகாரப் பணிக் கூட்டம் டிசம்பர் 29,30 ஆகிய நாட்களில், பெய்ஜிங்கில் நடைபெற்றது. புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனை என்ற வழிகாட்டலில், வேளாண், ஊரக விவகாரம் மற்றும் விவசாயிகள் குறித்த பணிகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரைகள் மற்றும் உத்தரவுகளை முழுமையாகச் செயல்படுத்தி, மத்திய பொருளாதார பணிக் கூட்டத்தின் எழுச்சியை நடைமுறைப்படுத்தி, தற்போதைய பணிகளில் உள்ள அறைகூவல்களை ஆய்வு செய்து, 2026ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய இம்மூன்று பணிகளுக்கு இக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.
ஷிச்சின்பிங் இக்கூட்டத்தில் கூறுகையில்,
2026ஆம் ஆண்டு, 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். வேளாண், ஊரக விவகாரம் மற்றும் விவசாயிகள் பணிகளைச் சீராக மேற்கொள்வது மிகவும் முக்கியம். வேளாண் மற்றும் கிராமப்புறங்களின் நவீனமயமாக்கத்தை மையம் கொண்டு, கிராமப்புறங்களின் பன்முக மறுமலர்ச்சியை உறுதியாக விரைவுபடுத்தி, நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கிடையில் ஒன்றிணைப்பு வளர்ச்சியை முன்னெடுத்து, இன்னல்களைக் கடந்து வறுமை ஒழிப்புப் பணியின் சாதனைகளை வலுப்படுத்தி, கிராமப்புறங்களின் ஆட்சி முறை மற்றும் நாகரிக கட்டுமான நிலையைத் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வேளாண், ஊரக விவகாரம் மற்றும் விவசாயிகள் பணிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முழுமையான வழிகாட்டலை வலுப்படுத்த வேண்டும் என்றும், கிராமப்புறங்களின் பன்முக மறுமலர்ச்சியின் புதிய வளர்ச்சி முன்னேற்றங்களை விரைவுபடுத்தி, வேளாண் மற்றும் கிராமப்புறத்தின் நவீனமயமாக்கத்தை மேலும் புதிய உயர் நிலைக்குத் தூண்ட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
