ஸ்பெயின் தலைமையமைச்சர் பெட்ரோ சான்செஸ் பெரெஸ்-காஸ்ட்ஜோன், மலேசியத் தலைமையமைச்சர் அன்வார் பின் இப்ராஹிம், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லீ சியென் லூங் ஆகியோருடன் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மார்ச் 31ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் தனிதனியாகச் சந்திப்பு நடத்தினார்.
போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2023ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் அவர்கள் பங்கெடுத்து, சீனாவில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டனர்.
மலேசியத் தலைமையமைச்சருடன் சந்திப்பின்போது, ஷி ச்சின்பிங் கூறுகையில், இப்பயணத்தின்போது, சீன-மலேசிய பொது எதிர்காலச் சமூகத்தின் கட்டுமானம் குறித்து இரு தரப்பும் பொதுக் கருத்துக்களை உருவாக்குவது, இரு நாட்டுறவின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைப்பது உறுதி என்றார்.
சிங்கப்பூர் தலைமையமைச்சர் இப்பயணத்தின்போது, சீன-சிங்கப்பூர் உறவு, தொலைநோக்குத் தன்மை மற்றும் உயர் தரம் வாய்ந்த பன்முக கூட்டாளி உறவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஷி ச்சின்பிங் கூறுகையில், சிங்கப்பூருடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, உயர் தரமுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்றார்.
இவ்வாண்டு, சீன-ஸ்பெயின் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவாகும். ஸ்பெயின் தலைமையமைச்சருடனான சந்திப்பின்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-ஐரோப்பிய உறவு நன்றாக வளர்ச்சியடைவதற்கு, நெடுநோக்கு சுய நிர்ணயத்தில் ஐரோப்பா ஊன்றி நிற்க வேண்டும். சீன-ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கு ஸ்பெயின் ஆக்கப்பூர்வப் பங்காற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.