தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது நீண்ட நாள் காதலன் ரஜித் இப்ரானுடன் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிவேதா, விரைவில் திருமண செய்தி குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிவேதா ஒரு பிரபல அரசியல் பிரமுகருடன் உறவில் இருப்பதாகவும், அவர் துபாயில் ரூ.50 கோடியில் வீடு வாங்கித் தந்ததாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியிருந்தன.
இது மட்டுமில்லாமல் இதுநாள் பரவி வந்த மற்ற காதல் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருமண செய்தியை அறிவித்தார் நடிகை நிவேதா பெத்துராஜ்
