ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் இந்த துயர நேரத்தில் இந்தியா துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.
“ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசியின் சோகமான மறைவு ஆழ்ந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது. இந்தியா-ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்த அவர் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
