மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குவதற்கு முன்பே, தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிகாரிகள் வரலாறு காணாத வகையில் ரூ.4,650 கோடி வரை பறிமுதல் செய்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் செய்யப்பட்ட பறிமுதல்களை விட அதிகமாகும். அதோடு, மார்ச் 1ஆம் தேதி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், நாட்டில் 75 ஆண்டுகால மக்களவைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பணப்பட்டுவாடா பறிமுதல்களை செய்துள்ளது தேர்தல் ஆணையம்,” என்று ECI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.