2026 புத்தாண்டு நாடக கலை நிகழ்ச்சி 30ஆம் நாளிரவு, சீன தேசிய நிகழ்த்துக் கலை மையத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்களான ஷிச்சின்பிங், லீச்சியாங், சாவ்லேஜி, வாங்ஹுநீங், சைய்ச்சி, டிங் சுவெய்சியாங், லீசி, ஹெங்சேங் முதலியோர் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்து, பொது மக்களுடன் சேர்ந்து புத்தாண்டை வரவேற்றனர்.
